லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
'ஆதாம்' படத்தின் மூலம் மலையாள திரை உலகில் தடம் பதித்த இயக்குநர் சமர் இயக்கும் முதல் தமிழ் படம் 'சீன் நம்பர் 62'. நிக்கில் ராமச்சந்திரனின் பவன்புத்ரா பட தயாரிப்பு நிறுவனமும், வேணுஜி ராமின் நவமுகுந்தா புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் தயாரிக்கிறது. கோகிலா கோபால், கதிரவன், அமல் தேவ், ஜாய்ஸ், வி ஜே வைத்தி, ஐஸ்வர்யா நந்தன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஜிகேவி இசை அமைக்கிறார்.
இந்த படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார் தேசிய விருது பெற்ற பாடகி நஞ்சம்மா. சிவபிரகாசம் எழுதியுள்ள 'என் சேவல்' என்ற பாடலை பாடி உள்ளார். அவருடன் வேல்முருகன் இணைந்து பாடி உள்ளார். ஆங்கிலம் கலக்காமல் தமிழ் மட்டுமே பயன்படுத்தி முழு பாடலையும் எழுதியுள்ளார் சிவபிரகாசம். சென்னை, புதுச்சேரி, கொடைக்கானல், பொள்ளாச்சி மற்றும் கேரளாவில் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.