ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
தமிழில் பிரம்மாண்டப் படங்களைக் கொடுத்த இயக்குனர் ஷங்கர் தெலுங்கில் முதல் முறையாக இயக்கி வரும் நேரடிப் படத்தில் ராம் சரண், கியாரா அத்வானி, அஞ்சலி மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் நடந்து வருகிறது.
இப்படத்தின் சில புகைப்படங்கள் நேற்று சமூக வலைத்தளங்களில் 'லீக்' ஆனது. அதில் அந்தக் கால இளைஞர் தோற்றத்தில் ராம் சரண், அவரது மனைவியாக நடிக்கும் அஞ்சலி ஆகியோர் உள்ள சில புகைப்படங்களும் அடக்கம். அந்தப் புகைப்படங்களை வைத்து அவை படத்தின் பிளாஷ்பேக் காட்சிகளாக இருக்கும் எனத் தெரிய வருகிறது. படத்தில் அப்பா, மகன் என இரண்டு வேடங்களில் ராம் சரண் நடிக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.
அப்பா கதாபாத்திரத்திற்கு அஞ்சலி ஜோடியாகவும், மகன் கதாபாத்திரத்திற்கு கியாரா அத்வானி ஜோடியாகவும் இருக்கலாம். அந்தக் கால தோற்றத்தில் உள்ள ராம் சரண், அஞ்சலி ஆகியோரைப் பார்ப்பதற்கு 'இந்தியன் 2' படத்தில் இடம் பெற்ற கமல்ஹாசன், சுகன்யா சம்பந்தப்பட்ட பிளாஷ்பேக் காட்சிகளின் 'கிளாசிக்' டச் இருப்பதாக ரசிகர்கள் பாராட்டியுள்ளார்கள். 2023ம் ஆண்டில் வெளியாக உள்ள இந்தப் படத்திற்கு தெலுங்கு ரசிகர்களிடம் நிறைய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.