ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
தெலுங்கில் காட்பாதர் படத்தை வெற்றி படமாக்கிய ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார் நயன்தாரா. அந்த அறிக்கையில், 'காட்பாதர் ஒரு மிகச்சிறந்த படம். சிரஞ்சீவி உடன் மீண்டும் நடிக்க கிடைத்த வாய்ப்பை பாக்கியமாக கருதுகிறேன். அவர் ஒரு வைரம் போன்றவர். எப்போதுமே உற்சாகமாக இருப்பார். படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் போது ஒவ்வொரு நொடியும் அருமையான நினைவாக அமைந்தது. அதோடு அனைவரும் ரசிக்கும் நடிகரான சல்மான்கான் இந்த படத்தில் நடித்ததால் இப்படம் மேலும் வலு பெற்றுள்ளது. அவருக்கு என்னுடைய நன்றி.
சத்ய தேவ், தான்யா போன்றவர்களும் சிறப்பாக நடித்துள்ளார்கள். இசையமைப்பாளர் தமன், கேமராமேன் நீரவ் ஷா ஆகியோர் தங்களது திறமையால் இந்த படத்தை வெற்றி பெற செய்துள்ளார்கள். ஆர்.பி.சவுத்ரி மற்றும் பிரசாத் ஆகியோர் இந்த படத்தை பிரமாண்டமாக விளம்பரம் செய்து வெற்றி பெற வைத்துள்ளார்கள். சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தினர் அனைவருக்கும் நன்றி. காட்பாதர் படத்தை சூப்பர் ஹிட் படமாக்கிய ரசிகர்களுக்கும் எனது நன்றி என்று அந்த அறிக்கையில் தெரிவித்து இருக்கிறார் நயன்தாரா.