மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்து சீசன்களையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். ஐந்தாவது சீசனுக்கு பிறகு பிக்பாஸ் அல்டிமேட் என்ற இன்னொரு நிகழ்ச்சி ஒளிபரப்பானது. கமலைத் தொடர்ந்து சிம்புவும் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்த நிலையில் நாளை(அக்., 9) முதல் பிக்பாஸ் சீசன்-6 நிகழ்ச்சி தொடங்கப்போகிறது. இந்த நிகழ்ச்சியையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கும் நிலையில் அடுத்தடுத்து புரோமோக்கள் வெளியாகின.
இந்த முறை போட்டியில் யார் யார் பங்கேற்க உள்ளார்கள் என்ற எதிர்பார்ப்பு ஒருபக்கம் இருக்க இந்த முறை பிக்பாஸ் வீட்டை கலர்புல்லாக மாற்றி உள்ளனர். பிக்பாஸ் வீட்டிற்கு வெளியேயும் சரி, உள்ளேயும் நிறைய மாற்றங்கள் கொண்டு வந்துள்ளனர். குறிப்பாக இன்டிரியர் ஒர்க் அதிகமாக வீட்டினுள் நடந்துள்ளது. அதனால் வீடு முழுக்கவே ஒரு கலர்புல்லாக உள்ளது. இதுதொடர்பாக போட்டோக்கள் வெளியாகி உள்ளன. அவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருவதுடன் அதை ரசிகர்கள் வைரலாக்கினர்.