படம்... பாராட்டு... பயம்... மனம் திறந்த ஸ்ரீகணேஷ் | நானும் மக்கள் பிரதிநிதி தான் - மதுவந்தி | விஷால் கோரிக்கையை நிராகரித்த சினிமா அமைப்புகள் | வெற்றிக்காக காத்திருக்கும் அப்பாவும், மகனும் | ஆட்டுக்கார அலமேலு, கல்யாணராமன், சுல்தான் : ஞாயிறு திரைப்படங்கள் | விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் |
அஜித் நடிக்கும் 'துணிவு' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது. இதற்காக படக்குழுவினர் அனைவரும் தாய்லாந்து சென்றுள்ள நிலையில், படத்தில் பிக்பாஸ் பிரபலங்கள் 3 பேர் இணைந்துள்ளதாக சோஷியல் மீடியாவில் செய்திகள் உலா வந்தது. ஆனால், அவர்கள் யார்? யார்? என்பது தெளிவாக தெரியவில்லை.
இந்நிலையில், பிக்பாஸ் பிரபலங்களான அமீர், பாவ்னி ரெட்டி, மற்றும் சிபி புவனசந்திரன் ஆகியோர் தாய்லாந்து ரெஸ்டாரண்ட் ஒன்றில் அஜித்துடன் அமர்ந்து இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. மேலும், அந்த புகைப்படங்களில் அஜித்தே மூவருடனும் சேர்ந்து செல்பியை கிளிக் செய்துள்ளார். அந்த புகைப்படங்களை தனது வெளியிட்டுள்ள பாவ்னி, 'என்ன சொல்ல, எப்படி சொல்ல? சொன்னால் யார் நம்புவார்கள். அற்புதமான மனிதர்?' என அஜித்தை புகழ்ந்து பதிவிட்டுள்ளார்.
இதனையடுத்து ஜோடியாகவே அஜித் படத்தில் என்ட்ரி கொடுத்துள்ள அமீர் - பாவ்னிக்கும், பிக்பாஸ் சீசன் 5 முடிந்த பிறகு படவாய்ப்புக்காக காத்திருந்த சிபிக்கும் நல்லதொரு வாய்ப்பு கிடைத்துள்ளதாக மூவருக்கும் அஜித் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.