நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | முதன்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்': இயக்குனர் லிங்குசாமி | கீர்த்தி சுரேஷ் வைத்த அன்பான கோரிக்கையை நிராகரித்த தனுஷ் | விஜய் ஆண்டனி இசையமைத்து பாடிய பூக்கி படத்தின் முதல் பாடல் வெளியானது! | தனுஷின் தேரே இஷ்க் மெயின் படத்தின் ப்ரீ புக்கிங் எவ்வளவு? | சூர்யா 46வது படம் 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறதா? | பிரதீப் ரங்கநாதனை புகழும் கிர்த்தி ஷெட்டி | டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் |

வில்லேஜ் ஸ்டுடியோஸ் சார்பில் முருகன், அன்னை செந்தில்குமார் இணைந்து தயாரிக்கும் படம் குளவி. ஆர்.கே.சுரேஷ் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக சசிகுமார் ஜோடியாக அயோத்தி படத்தில் நடித்து வரும் அமீரா வர்மா நடிக்கிறார். மற்றும் ஆனந்த் நாக், கஞ்சா கருப்பு, சிங்கம்புலி, அப்பு குட்டி, நிமல், முத்துகாளை உள்பட பலர் நடிக்கிறார்கள். விஜயன் முனுசாமி ஒளிப்பதிவு செய்கிறார், என்.ஆர். ரகுநந்தன் இசையமைக்கிறார்.
ஏ.ஆர்.முருகதாசின் உதவியாளர் வி.எஸ்.செல்வதுரை இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறியதாவது: ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த படத்தை உருவாக்க இருக்கிறேன். அந்த மக்களின் கலாச்சாரம் வாழ்வியலை இதில் பதிவு செய்ய இருக்கிறோம். குடும்பக் கட்டமைப்பு மற்றும் அதில் உள்ள முரண்பாடுகளையும், மனித உறவுகளின் சீரழிவுகளையும் இதில் நேர்த்தியாக சொல்ல இருக்கிறோம்.
ஒவ்வொரு குடும்பத்திலும் பெண்களின் முக்கியத்துவம் எப்படி இருக்கிறது. அதை அவர்கள் எவ்வாறு கையாள வேண்டும் என்பதை சொல்லும் படம் இது. நகைச்சுவையுடன் முழுக்க முழுக்க குடும்ப உறவுகளை பற்றிய படமாக இதை கொடுக்க இருக்கிறோம். படப்பிடிப்பு திருநெல்வேலி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற இருக்கிறது என்றார்.