தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
தமிழ் படங்களை கேரளாவில் விநியோகம் செய்து வந்த கே.டி.குஞ்சுமோன் பின்னர் தயாரிப்பாளராக மாறினார். வசந்தகால பறவைகள், சூரியன் படங்களின் வெற்றிகளை தொடர்ந்து, 1993ல் பிரமாண்டமாக அவர் தயாரித்த படம் ஜென்டில்மேன். ஷங்கரை டைரக்டராக அறிமுகப்படுத்திய படம். அடுத்ததாக பல வெற்றிப் படங்களையும் தயாரித்துள்ளார்.
ஜென்டில்மேன் படம் மிகப்பெரிய ஹிட்டான நிலையில், அதன் 2ம் பாகத்தை தான் தயாரிக்கவுள்ளதாக குஞ்சுமோன் ஏற்கனவே அறிவித்திருந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தியில் இப்படத்தை எடுக்க உள்ளதாகவும் அதற்காக ஜென்டில்மேன் பிலிம் இன்டர்நேஷ்னல் எனும் பெயரில் புதிய நிறுவனத்தையும் உருவாக்கினார்.
பின்னர் அவ்வபோது ‛ஜென்டில்மேன் 2' படம் குறித்த அப்டேட்டை கே.டி.குஞ்சுமோன் வெளியிட்டு வந்தார். அந்த வகையில், ஆஹா கல்யாணம் படத்தை இயக்கிய கோகுல் கிருஷ்ணா இப்படத்தை இயக்க உள்ளதாகவும், பாகுபலி, ஆர்ஆர்ஆர் படத்திற்கு இசையமைத்த எம்.எம்.கீரவாணி இசையமைக்க உள்ளதாகவும் அறிவித்தார். பின்னர் படத்தில் கதாநாயகிகளாக நயன்தாரா சக்கரவர்த்தி, பிரியா லால் நடிக்கவுள்ளதாக அறிவித்தார்.
இந்நிலையில் படத்தின் கதாநாயகன் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தின் லீட் ரோலில் சேதன் சீனு நடிக்கிறார். தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி கதாநாயகனாக வளர்ந்து வரும் சேதன் சீனு, தற்போது காவேரி கல்யாணி இயக்கும் படத்தில் 12 மாறுபட்ட வேடங்களில் நடித்து வருகிறார். மேலும், தமிழிலும் தெலுங்கிலும் வெளியாகும் தடா மற்றும் பெயர் பெயர் சூட்டப்படாத வேறு இரண்டு படங்களிலும் நடித்து வருகிறார்.