டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

மணிரத்னம் இயக்கத்தில் உலகம் முழுவதும் நேற்று வெளியான 'பொன்னியின் செல்வன்' படம் முதல் நாளில் 80 கோடி வரை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமான லைக்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தியாவைத் தவிர வெளிநாடுகளில் முக்கியமாக அமெரிக்க வசூல் குறிப்பிடத்தக்க அளவில் இருக்கும். அது 'பொன்னியின் செல்வன்' படத்திற்கு அதிகமாகவே அமைந்துள்ளது. பிரிமீயர் காட்சிகள் மற்றும், முதல் நாள் வசூல் ஆகியவற்றைச் சேர்த்து 2 மில்லியன் யுஎஸ் டாலருக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாம். இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 17 கோடி வரை வசூல் கிடைத்துள்ளது.
இன்றும், நாளையும் விடுமுறை தினம் என்பதால் முதல் வார இறுதி நாள் வசூல் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா மட்டுமல்லாது உலகம் முழுவதும் தமிழர்கள் வாழும் நாடுகளில் இப்படத்திற்கான வரவேற்பு அதிகமாக இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.




