லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
அந்த காலத்தில் ஒலிச்சித்ரம் ரொம்பே பேமஸ், திருவிளையாடல், சரஸ்வதி சபதம், மதுரை வீரன், நாடோடி மன்னன் படங்களின் ஒலிசித்திரங்கள் மிகவும் பிரபலம். இதனை வானொலிகள் ஒளிபரப்பும். அதேபோல ரேடியோ நாடகங்களும் அந்த காலத்தில் புகழ்பெற்றவை. அது மாதிரியான ஒன்றுதான் நாவல்களை ஆடியோ நாடகங்களாக தயாரித்து வெளியிடுவது. இந்த துறையில் டிசி என்ற நிறுவனம் முன்னணியில் இருக்கிறது.
இந்த நிறுவனம் வெளியிடும் பிரத்யேகமாக ஆடியோ நாடகங்கள் சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறது. அதிலும் குறிப்பாக 'தி சான்ட்மேன்: ஆக்ட்' எனும் பெயரிலான ஆடியோ நாடகத்திற்கு ரசிகர்கள் அதிகம். இந்நிலையில் இந்த நாடகத்தின் 3வது பாகம் இந்தியாவில் வெளியாக உள்ளது. இதில் நடிகை ஸ்ருதிஹாசன் நடித்திருக்கிறார். அதாவது குரல் கொடுத்திருக்கிறார்.
இது தொடர்பாக நடிகை ஸ்ருதிஹாசன் கூறியிருப்பதாவது: இசை கலைஞராக தொடரும் என்னுடைய பயணத்தில் 'தி சான்ட்மேன்: ஆக்ட்' போன்ற ஆடியோ வடிவிலான நாடகத்தில் பின்னணி பேச வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. அது தற்போது நனவாகி இருக்கிறது. இந்த ஆடியோ நாடகத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் நீல் கியாமனின் மிகப்பெரிய ரசிகை நான். நீல் கியாமன் எழுதிய தி சான்ட்மேன் எனும் ஆடியோ நாடகத் தொடரில் ஒரு சிறிய பகுதியாக என்னுடைய பங்களிப்பை வழங்கியிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.