கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் | கிங்டம் படத்திற்கு எதிர்ப்பு : நா.த.க.,வினர் முற்றுகை, கைது | மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் | தமிழில் வாய்ப்பு தேடும் ஐஸ்வர்யா மேனன் |
ஹாலிவுட் சினிமாவை இந்தியா நோக்கி திரும்பிப் பார்க்க வைத்தவர் எஸ்.எஸ்.ராஜமவுலி. அவர் இயக்கிய பாகுபலி, ஆர்ஆர்ஆர் படங்கள் உலக அளவில் வெற்றி பெற்று ஆயிரம் கோடிக்கு மேல் வசூலையும் குவித்தது. அடுத்து அவர் ஹாலிவுட் படம் இயக்க வாய்ப்பு வந்தபோதும் இந்திய படங்களை ஹாலிவுட்டுக்கு கொண்டு செல்வதே என் இலக்கு என அறிவித்து தற்போது மகேஷ் பாபு நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார்.
ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் கதையில் உருவாகும் இந்த படத்தின் கதை ஆப்ரிக்க காடுகள் பின்னணியில் நடைபெறும் கதையம்சம் கொண்ட இப்படத்தில் ஏராளமான கிராபிக்ஸ் பணிகள் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் பிரபல ஹாலிவுட் நடிகர் கிரிஸ் ஹெம்ஸ்வொர்த் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர் ஹாலிவுட்டில் சூப்பர்ஹிட்டான ‛தோர்' மற்றும் ‛அவெஞ்சர்ஸ்' உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மகேஷ்பாபு - ராஜமவுலியின் படம் துவங்குவதற்கு முன்னரே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.