பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, சித்தி இத்னானி, ராதிகா, நீரஜ் மாதவ் நடிப்பில் உருவான படம் 'வெந்து தணிந்தது காடு'. செப்.,15ம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களே கிடைத்தாலும் நல்ல வசூலை குவித்துள்ளது. இதனால் குஷியான படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், இயக்குநருக்கும், நடிகருக்கும் பரிசளித்துள்ளார்.
இயக்குனர் கவுதம் மேனனுக்கு தயாரிப்பாளர் ஐசரி கணேசன் ரூ.2 லட்சத்திற்கும் மேல் மதிப்பிலான புல்லட் பைக் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து படத்தின் சக்சஸ் மீட்டில் நடிகர் சிம்புவுக்கு உயர்தர சொகுசு கார் ஒன்றையும் பரிசாக அளித்துள்ளார் தயாரிப்பாளர். இந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகியுள்ளன.
சமீபத்தில் வெளியான கமலின் விக்ரம் திரைப்படம் வெற்றிபெற்றபோது அதன் இயக்குனருக்கு ரூ.80 லட்சம் மதிப்புள்ள சொகுசு காரை பரிசாக வழங்கி இருந்தார் கமல். அதுமட்டுமின்றி அப்படத்தில் பணியாற்றிய உதவி இயக்குனர்களுக்கு பைக்குகளையும் பரிசளித்தார். தற்போது அதே டிரெண்டை தயாரிப்பாளர் ஐசரி கணேசன் பாலோ பண்ணி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.