ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
கற்றது தமிழ், அங்காடி தெரு, அரவான், கலகலப்பு, இறைவி, தரமணி, எங்கேயும் எப்போதும், பேரன்பு உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தவர் அஞ்சலி. கடைசியாக 2 வருடங்களுக்கு முன்பு நாடோடிகள் 2ம் பாகத்தில் நடித்தார். தற்போது அவர் ஓடிடியில் வெளியாக இருக்கும் 'பால்' என்ற வெப் தொடரில் நடிக்கிறார். இதில் அவருடன் எஸ்பிபி சரண், சோனியா அகர்வால், சந்தோஷ் பிரதாப், நமிதா கிருஷ்ணமூர்த்தி, தலைவாசல் விஜய் மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
சித்தார்த் ராமசாமி ஒளிப்பதிவு செய்து, இயக்குகிறார். அஜேஸ் இசை அமைக்கிறார். இது பல சர்வதேச விருகளை பெற்ற 'வெர்டிஜ்' எனும் கனடா நாட்டின் வெப் சீரிஸின் அதிகாரப்பூர்வ ரீமேக்காகும். ஒரு இளம் பெண் பல்வேறு பிரச்சினைகள் காரணமா தற்கொலை செய்ய முயற்சிக்கிறாள். இந்த முயற்சியில் இருந்து அவள் காப்பாற்றப்படுகிறாள். அவளுக்கு தனது கடைசி 24 மணி நேர நினைவுகள் தவிர மற்றவைகள் மறந்து விடுகிறது. அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் தொடரின் கதை.