ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! |

கடந்த வாரம் வெளியான படங்களில் ‛ஜென்ம நட்சத்திரம்', ‛பன் பட்டர் ஜாம்' கொஞ்சம் பேசப்பட்டது. ஆனாலும், இந்த இரண்டு படங்களில் வசூல் 1 கோடியை தாண்டவே படாதபாடு பட்டு இருக்கிறது. இந்த மிகக்குறைவான வசூல் படக்குழுவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஆகவே, இரண்டு படக்குழுவும் சென்னை தவிர்த்த மற்ற ஊர்களுக்கு சென்று படத்தை விளம்பரப்படுத்தி வருகிறார்கள்.
வரிசையாக தமிழ் படங்களின் வசூல் நிலவரம் குறைந்து வருவது தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள், வினியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் என அனைவரையும் பயப்பட வைத்துள்ளது.
சாட்டிலைட், டிஜிட்டல், ஆடியோ ரைட்சும் முன்போல விற்பதில்லை, எனவே, அழிந்து வரும் சினிமாவை காப்பாற்ற அனைத்து சினிமா சங்கங்களும் கூடி பேச வேண்டும். கூட்டுக்குழு அமைக்க வேண்டும். அதில் எடுக்கும் முடிவு படி ரிலீஸ் தேதி உள்ளிட்ட விஷயங்கள் இருக்க வேண்டும் என்று பலரும் நினைக்கிறார்கள்.
ஆனால், தமிழ் சினிமா சங்க ரீதியாக பிரிந்து இருப்பதால், இதை யார் முன்னெடுப்பது, யார் ஒருங்கிணைப்பது என்ற சிக்கல் ஏற்பட்டுள்ளது. சினிமாவில் இருந்து சென்றவர்தான் துணை முதல்வராக இருக்கிறார். அவராவது இவர்களை ஒருங்கிணைக்க வேண்டும். சினிமா வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்பது பலரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.