ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
இன்றைய முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் வெங்கட் பிரபு. அவரது இயக்கத்தில் சிலம்பரசன் நடித்து வெளிவந்த 'மாநாடு' படம் கடந்த ஆண்டின் பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றாக அமைந்தது. அடுத்து தமிழ், தெலுங்கில் நாக சைதன்யா நடிக்க உள்ள படத்தை இயக்கப் போகிறார் வெங்கட் பிரபு.
அவரது இயக்கத்தில் பிரேம்ஜி இசையமைப்பில் ஜெய், சிவா, ஷாம், சத்யராஜ், ஜெயராம், ரம்யா கிருஷ்ணன், ரெஜினா உள்ளிடோர் நடித்து ஐந்து வருடங்களுக்கு முன்பே முடிந்த 'பார்ட்டி' படம் இதுவரையிலும் வெளியாகாமல் உள்ளது. படத்திற்கான சென்சார் வேலைகளும் அப்போதே முடிந்துவிட்டது. ஆனால், சில பல காரணங்களால் பட வெளியீடு இன்னும் நடக்கவேயில்லை.இப்படத்தின் டீசர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே 2017ம் ஆண்டில் வெளியிடப்பட்டது. அதில் விரைவில் வெளியாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.
அப்படத்தின் தயாரிப்பாளரான அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா இன்று தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு வாழ்த்து சொல்லியுள்ள வெங்கட் பிரபு, “சீக்கிரம் 'பார்ட்டி' கொடுங்க சார், தமிழ்நாடே வெயிட்டிங்,” என 'பார்ட்டி' குழுவினருடன் எடுத்த புகைப்படத்தைப் பதிவிட்டு வேண்டுகோள் விடுத்துள்ளார்.