நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' | 3 ஹீரோக்கள் இணையும் படம் |
செல்வராகவன் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், தனுஷ், எல்லி மற்றும் பலர் நடித்துள்ள படம் 'நானே வருவேன்'. இந்த மாதக் கடைசியில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 'பொன்னியின் செல்வன்' வெளியாகும் செப்டம்பர் 30ம் தேதிக்கு ஒரு நாள் முன்னதாக செப்டம்பர் 29ல் இப்படம் வெளியாக உள்ளது என கோலிவுட்டில் சொல்கிறார்கள்.
இப்படத்தை தெலுங்கில் 'நேனே வஸ்துன்னா' என்ற பெயரில் வெளியிட உள்ளார்கள். நடிகர் அல்லு அர்ஜுனின் அப்பா அல்லு அரவிந்த் அவரது தயாரிப்பு நிறுவனமான கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் மூலம் இப்படத்தை வெளியிட உள்ளார். இது பற்றிய தகவலை 'நானே வருவேன்' தயாரிப்பாளர் தாணு தெரிவித்துள்ளார்.
இயக்குனர் செல்வராகவன் தெலுங்கு ரசிகர்களிடம் ஏற்கெனவே அறிமுகமானவர் தான். மேலும், தற்போது தனுஷும் பான் இந்தியா நடிகராக உள்ளதால் 'நேனே வஸ்துன்னா' படத்திற்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைக்க வாய்ப்புள்ளது.
இதனிடையே நானே வருவேன் படத்தின் டீசரை நாளை(செப்., 15) வெளியிடுவதாக தயாரிப்பாளர் தாணு அறிவித்துள்ளார்.