கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே | அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு | 24 லட்சம் வாடகையில் புதிய அபார்ட்மென்ட்டுக்கு குடிபெயர்ந்த ஷாருக்கான் | உடை மாற்ற உதவிக்கு வருவேன் என அடம்பிடித்த போதை நடிகர் : மலையாள நடிகை அதிர்ச்சி தகவல் | ஜெய ஜெய ஜெய ஜெய ஹே ஹிந்தி ரீமேக்கை அமீர்கான் கைவிட்டது ஏன்? : நடிகர் புது தகவல் | மீரா ஜாஸ்மின் பெயர் என் காதுகளில் ஒலிக்காத நாளே இல்லை ; சிலாகித்த நயன்தாரா | கேரள முதல்வரின் சொந்த ஊர் கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் | கிடப்பில் இருக்கும் பிரபுதேவா படத்தை வெளியிட முயற்சி |
இயக்குனர் கவுதம் மேனன், இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான், சிம்பு கூட்டணி 2010ம் ஆண்டில் நிகழ்த்திய 'மேஜிக்' தான் 'விண்ணைத் தாண்டி வருவாயா'. 2000க்குப் பிறகு வெளிவந்த காதல் படங்களில் அப்படத்திற்கு ரசிகர்கள் மனதில் தனி இடமுண்டு. வெளிவந்து 12 ஆண்டுகள் ஆன பிறகும் கார்த்திக், ஜெஸ்ஸி கதாபாத்திரங்கள் ரசிக்கப்பட்டு வருகிறது. இன்றைய இளம் இயக்குனர்கள் எடுக்கும் காதல் படங்களுக்கு அப்படம் ஒரு முன்னுதாரணமாய் இருக்கிறது.
அப்படி ஒரு மேஜிக் செய்த கூட்டணியிடமிருந்து ஆறு வருடங்கள் கழித்து வெளிவந்த படம் 'அச்சம் என்பது மடமையடா'. இப்படத்தில் காதலுடன் ஆக்ஷனையும் கலந்து கொடுத்ததாலும், படம் கொஞ்சம் கால தாமதமாக வெளிவந்ததாலும் ரசிகர்களிடத்தில் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை. மீண்டும் ஒரு ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு கவுதம், ஏஆர்ஆர், சிம்பு கூட்டணியில் இந்த வாரம் செப்டம்பர் 15ம் தேதி வெளிவர உள்ள படம் 'வெந்து தணிந்தது காடு'.
இப்படத்தின் டிரைலரைப் பார்த்தும், பாடல்களைக் கேட்டும் ரசிகர்களிடம் ஒரு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. காதலை விடவும் ஆக்ஷன்தான் படத்தில் பிரதானமாக இருக்கும் எனத் தெரிகிறது. வித்தியாசமான தோற்றத்தில் சிம்பு நடித்திருப்பதால் அவருடைய ரசிகர்களைக் கவரலாம். படத்தின் நீளம் 3 மணி நேரம் என்று ஒரு தகவல். சமீப காலத்தில் இப்படி நீளமாக வரும் படங்கள் பொறுமையை சோதிக்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மை.
கவுதம், ஏஆர்ஆர், சிம்பு என்ற மூவர் கூட்டணியின் மூன்றாவது படமான 'வெந்து தணிந்தது காடு' எப்படிப்பட்ட படமாக அமையப் போகிறது என்பது திரையுலகினரிடமும், ரசிகர்களிடமும் ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.