விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் | சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் |
கடந்த ஒரு வருடமாகவே ஆர்ஆர்ஆர் படத்தின் புரமோஷன் சமயத்திலிருந்து எந்நேரமும் அடர்ந்த தாடியுடனே காணப்பட்டார் ராம்சரண். அடுத்ததாக தற்போது ஷங்கர் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திலும் அவரது தோற்றம் ஏற்கனவே பார்த்த ஒன்றாகவே இருக்கின்றது.
இந்த நிலையில் தற்போது நவிமும்பை பகுதியில் உள்ள தனது உறவினர் பெண் படிக்கும் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக வருகை தந்திருந்தார் ராம்சரண். அவரது தோற்றத்தை பார்க்கும்போது துல்கர் சல்மான் தான் வந்துவிட்டாரோ என்று நினைக்கும் அளவிற்கு முகத்தோற்றமும், உடையும் துல்கர் சல்மனை ஞாபகப்படுத்துவது போலவே முற்றிலும் மாறி இருந்தது. புதிய தோற்றத்தில் ஸ்டைலாக இருந்த அவரை பார்த்து அங்கிருந்த மாணவிகள் ஆர்வமுடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.
இது ஒரு பக்கமிருக்க சர்க்காரு வாரி பாட்டா படத்தை தொடர்ந்து அடுத்ததாக தற்போது திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கிறார் மகேஷ்பாபு. இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் துவங்கியுள்ளது. இதற்காக படப்பிடிப்பு தளத்திற்கு வந்த மகேஷ்பாபுவின் புதிய லுக் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. ஒரு பக்கம் வித்யுத் ஜாம்வாலையும் போலவும் இன்னொரு பக்கம் கவுதம் கார்த்திக்கையும் ஞாபகப்படுத்துவது போன்று அமைந்துள்ளது மகேஷ்பாபுவின் இந்த புதிய தோற்றம். காரணம் இதுவரை இல்லாத ஒரு புதிய ஹேர்ஸ்டைலில் ட்ரிம் செய்யப்பட்ட தாடியுடனும் காணப்படுகிறார் மகேஷ்பாபு. இந்த தோற்றத்தில் தான் அவர் இந்த படத்தில் நடிக்க உள்ளாராம். அந்தவகையில் இந்த மாறுபட்ட தோற்றங்களில் தங்களது ரசிகர்களை இன்ப அதிர்ச்சிக்கு ஆளாகி உள்ளனர் மகேஷ்பாபுவும் ராம்சரணும்.