டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

தமிழில் பட வாய்ப்பு இல்லாத ரெஜினாவுக்கு தெலுங்கு சினிமா தொடர்ந்து வாய்ப்பளித்து வருகிறது. தற்போது அவரும் நிவேதா தாமசும் இணைந்து ஷாகினி டாகினி என்ற பெயரில் ஒரு தெலுங்கு படத்தில் நடித்திருக்கிறார்கள். ஹீரோயின்களை மையமாக கொண்ட இந்த படம் வருகிற 16ம் தேதி திரைக்கு வரவிருக்கும் நிலையில் தற்போது அப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் ரெஜினாவும், நிவேதாவும் கலந்து கொண்டு வருகிறார்கள்.
ஒரு பேட்டியில் ரெஜினா, ஆண்களை மேகி நூடுல்ஸ் உடன் ஒப்பிட்டு கேலி செய்திருக்கிறார். அதோடு எனக்கு அது பற்றி ஒரு ஜோக் தெரியும். ஆனால் நான் அதை இங்கே உடைக்க கூடாது என்று அந்த இரட்டை அர்த்த காமெடியை பேசியிருக்கிறார். இதை கேட்ட அருகில் இருந்த நிவேதா உள்ளிட்டோருக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. இந்த வீடியோ வைரலான நிலையில் ரசிகர்கள் பலரும் அதற்கு பல வகையான கருத்துக்களையும், மீம்ஸ்களையும் வெளியிட்டு வருகின்றனர்.




