ஹீரோ ஆனார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | ‛சக்தி திருமகன்' முதல் ‛ஓஜி' வரை : இந்த வார ஓடிடி ஸ்பெஷல்....! | 'பைசன்' படத்தை பாராட்டிய பா.ஜ.,வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை! | ஹாட்ரிக் ரூ.100 கோடி வசூலை தந்த பிரதீப் ரங்கநாதன் | அக்டோபர் 31ல் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் தனுஷின் இட்லி கடை! | 5 நிமிட நடனத்திற்கு ஐந்து கோடி சம்பளம் வாங்கும் பூஜா ஹெக்டே! | கருத்த மச்சான் பாடலுக்கு மமிதா பைஜூ அசத்தல் நடனம் ! வைரலாகும் வீடியோ!! | கிண்டல் செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த சூரி | 'பராசக்தி' பாடல்கள் விரைவில்… ஜிவி பிரகாஷ் தகவல் | கதை நாயகியான கீதா கைலாசம் |
சென்னை பெண்ணான ரெஜினா, 2005ம் ஆண்டு வெளியான 'கண்ட நாள் முதல்' படத்தில் சிறிய கேரக்டர் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு 'அழகிய அசுரா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, மாநகரம், சக்ரா, கசட தபற, கான்ஜூரிங் கண்ணப்பன், விடாமுயற்சி' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இடையில் சில காலம் தமிழில் சரியான வாய்ப்புகள் இல்லாமல் போகவே தெலுங்கு பக்கம் சென்றவர் அங்கு முன்னணி நடிகை ஆனார். தற்போது 'தி விவ்ஸ், செக்ஷன் 108' என்கிற இந்தி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் 'மூக்குத்தி அம்மன் 2ம் பாகம்' படத்தில் நடித்து வருகிறார்.
ரெஜினா அறிமுகமான 'கண்ட நாள் முதல்' வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைகிறது. ரெஜினாவும் சினிமாவில் தனது 20வது ஆண்டை நிறைவு செய்கிறார். இதுகுறித்து அவர் கூறும்போது ''ரசிகர்களின் அன்பில் இத்தனை ஆண்டுகள் நனைந்தது மகிழ்ச்சி. இந்த பயணம் நீண்ட தூரமானது. இன்னும் இந்த பயணத்தில் முழுமையாக எனது கடின உழைப்பைத் தருவேன். தொடர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பேன்'', என்றார்.