அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி உள்ள படம் பொன்னியின் செல்வன். விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ள இந்த படம் வருகிற 30ம் தேதி வெளியாகிறது. சமீபத்தில் இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்ற போது ரஜினி, கமல் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.
இந்த நிலையில் தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி என்ற வேடத்தில் நடித்துள்ள ஐஸ்வர்யாராய்க்கு முதன் முதலாக தான் தமிழில் டப்பிங் கொடுத்திருப்பதாக நடிகை தீபா வெங்கட் ஒரு தகவல் வெளியிட்டுள்ளார். அது குறித்து அவர் கூறுகையில், மணிரத்னம் இயக்கி உள்ள பொன்னியின் செல்வன் படத்தில் நானும் ஒரு அங்கமாக இருப்பது சந்தோஷமாகவும் பெருமையாகவும் உள்ளது. இந்த படத்தின் மூலம் முதல் முறையாக நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு குரல் கொடுத்து இருக்கிறேன். இந்த வாய்ப்பினை எனக்கு அளித்த இயக்குனர் மணிரத்னம் அவர்களுக்கு நன்றி, என தெரிவித்துள்ளார் தீபா வெங்கட்.