பாலோயர்ஸ்: உண்மையைப் பேசியுள்ள பூஜா ஹெக்டே | ரீ-ரிலீஸில் வரவேற்பைப் பெறுமா 'சச்சின்' | நஷ்டஈடு கேட்டு இளையராஜா நோட்டீஸ்: 'குட் பேட் அக்லி' தயாரிப்பாளர் விளக்கம் | ஓடிடி.,யிலும் தோல்வியடைந்த யுவன் ஷங்கர் ராஜா படம் | ஓடிடி-யில் வெளியாகும் வரலக்ஷ்மி சரத்குமாரின் திரில்லர் படம் | கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே | அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு | 24 லட்சம் வாடகையில் புதிய அபார்ட்மென்ட்டுக்கு குடிபெயர்ந்த ஷாருக்கான் |
சின்னத்திரை நடிகையான ஸ்ரீநிதி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி தொலைக்காட்சிகளில் பல ஹிட் சீரியல்களில் நடித்து வந்தார். சின்னத்திரையில் ஸ்ரீநிதியின் கேரியர் கிராப் நன்றாக தான் சென்று கொண்டிருந்தது. ஆனால், திடீரென தடம் மாறிய ஸ்ரீநிதி, அஜித் ரசிகர்களுடன் சர்ச்சை, சிம்புவுடன் காதல் சர்ச்சை, நக்ஷத்திராவின் திருமண சர்ச்சை என வரிசையாக சர்ச்சைகளில் சிக்கினார். ஒருக்கட்டத்தில் ஸ்ரீநிதியின் தாயாரே ஸ்ரீநிதிக்கு மனநிலை சரியில்லை என கூறும் அளவுக்கு சோஷியல் மீடியாவிலும், ஊடக நேர்காணல்களிலும் அவரது பேச்சுகள் இருந்தது. இதனை தொடர்ந்து கவுன்சிலிங்கிறாக மனநல மருத்துவமனையில் ஸ்ரீநிதி அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சை முடிந்து வெளியே வந்த ஸ்ரீநிதி பாசிட்டிவாக பதிவை போட்டு ஸ்டார்ட் செய்தாலும், இப்போது அவரது பேச்சுகளும் பதிவுகளும் சர்ச்சையை கிளப்பும் வகையில் தான் இருந்து வருகிறது. இந்நிலயில், சமீபத்தில் ஒரு பேட்டியில், 'உண்மைய சொல்லனும்னா, விக்னேஷ் சிவன் லக்கி கிடையாது. நயன்தாரா தான் லக்கி. காரணம் விக்னேஷ் சிவன் நல்ல தமிழ் பையன். நயன்தாராவை நல்ல பார்த்துப்பார். அதனால் நயன்தாரா தான் லக்கி' என கூறியுள்ளார். இதை பார்த்து கடுப்பான நயன்தாராவின் ரசிகர்கள் ஸ்ரீநிதியை லெப்ட் ரைட் வாங்கி வருகின்றனர்.