ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛மயிலா' | ரஜினி - கமல் இணையும் படம் குறித்து அப்டேட் கொடுத்த சவுந்தர்யா ரஜினி - ஸ்ருதிஹாசன்! | சமந்தாவின் 'மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு தொடங்கியது! | கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யை விமர்சித்தாரா சூரி? -அவரே கொடுத்த விளக்கம் | பிரபாஸ் படத்தில் நடிக்கும் பழம்பெரும் நடிகை காஞ்சனா | 'காந்தாரா சாப்டர் 1' படத்திற்கு அல்லு அர்ஜுன் பாராட்டு | விஷ்ணு விஷால் என் என்ஜினை ஸ்டார்ட் செய்து வைத்தார் : கருணாகரன் | ஒரே ஆண்டில் தமிழில் இரண்டு வெற்றிப் படங்களில் அனுபமா பரமேஸ்வரன் | மாஸ்க் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஓடிடியில் அடுத்த வாரம் வரும் 'லோகா' |

யூடியூப், சமூக வலைதளங்கள் வந்த பிறகு அதிக பார்வைகளைப் பெறும் டிரைலர்கள், பாடல்கள் நல்ல வசூலைப் பெறும் வரவேற்பைப் பெறும் என்ற ஒரு நம்பிக்கை உள்ளது. அது போல அதிக பாலோயர்களை வைத்திருப்பவர்களிடம் பணம் கொடுத்து தங்களது படங்களை 'புரமோஷன்' செய்தால் அது மக்களைச் சென்றடையும் என்ற தவறான நம்பிக்கையும் சினிமாவில் உள்ளது.
தற்போது 'அதிக பாலோயர்கள்' வைத்திருப்பவர்களைத்தான் சினிமா புரமோஷன்களுக்கும் அதிகமாகப் பயன்படுத்தி வருகிறார்கள் சிலர். அது பற்றிய உண்மையான தெளிவான புரிதல் ஒன்றை வெளிப்படுத்தி இருக்கிறார் நடிகை பூஜா ஹெக்டே. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என நடித்துக் கொண்டிருக்கும் பூஜாவின் அடுத்த வெளியீடாக 'ரெட்ரோ' தமிழ்ப் படம் மே 1ம் தேதி வெளியாக உள்ளது.
சமீபத்திய பேட்டி ஒன்றில், “சமூக வலைதளங்களும், நிஜ வாழ்க்கையும் வெவ்வேறானவை. முகத்தைக் காட்டிக் கொள்ளாத பலரால் நானும் பாதிக்கப்பட்டுள்ளேன். நானும் மனுஷிதான். ஆனால், அது உண்மையானதல்ல என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். எனக்கு இன்ஸ்டாவில் 30 மில்லியன் பாலோயர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவை அனைத்தும் 30 மில்லியன் சினிமா டிக்கெட்டாக மாறும் என்று சொல்ல முடியாது. அதே சமயம் சில சூப்பர் ஸ்டார்கள் 5 மில்லியன் பாலோயர்களை மட்டுமே வைத்திருக்கிறார்கள். இருந்தாலும் அவர்கள் ரசிகர்களை தியேட்டர்களுக்கு மிக அதிகமாக வரவழைக்கிறார்கள். நமது வேலை சரியாகச் செய்வது முக்கியம், அதற்கான கருத்தை மக்களிடம் இருந்து நேரடியாகப் பெறுவதே சிறப்பு,” என்று பூஜா கூறியுள்ளார்.
இந்தப் புரிதல் மற்ற சினிமா பிரபலங்களிடமும் இருந்தால் சமூக வலைதள வரம்பு மீறிய 'டிரோல்கள், விமர்சனங்கள்' ஆகியவற்றிற்கு ஒரு முற்றுப்புள்ளி கிடைக்கும்.




