பிளாஷ்பேக் : கலோக்கியல் தலைப்பின் தொடக்கம் | தெலுங்கு கம்யூனிஸ்ட் தலைவராக நடிக்கும் கன்னட ராஜ்குமார் | யானை தந்த வழக்கு: மோகன்லாலின் உரிமம் ரத்து | கவர்ச்சிக்கு மாற நினைக்கும் கயாடு லோஹர் | டிசம்பர் 5ல் அகண்டா 2 ரிலீஸ் : தமிழில் பேசிய பாலகிருஷ்ணா | இன்னும் 2 மாதம் டல் சீசன் : பெரிய படங்கள் வராத நிலை | என் குழந்தைக்கு வயது 33 : ‛தேவர் மகன்' பற்றி கமல் பதிவு | ஐந்து மொழிகளில் வெளியான 'பாகுபலி தி எபிக் டிரைலர்' | 'டியூட்' படத்தை அடுத்து 'பைசன்' வெற்றி விழா | அஜித் மார்பில் அம்மன் டாட்டூ : பக்திப் பரவசத்தில் ரசிகர்கள் |

இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான 'அவன் இவன்' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஜனனி (ஜனனி ஐயர்). அதைத்தொடர்ந்து தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் மாறி மாறி நடித்து வருகிறார். இதற்கிடையே கடந்த 2018ல் பிக்பாஸ் சீசன்-2வில் போட்டியாளராக பங்கேற்று மூன்றாவது ரன்னராக பரிசு பெற்றார். இந்த நிலையில் தற்போது திருமண பந்தத்தில் அடி எடுத்து வைக்கிறார் ஜனனி.
ஆம் இவருக்கும் விமான பைலட்டாக பணிபுரியும் ரோஷன் சியாம் என்பவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது. இதற்கான திருமண நிச்சயதார்த்த நிகழ்வு சமீபத்தில் நடைபெற்றுள்ளது. குறித்த புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ள ஜனனி, “இப்போதும் எப்போதும்” என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.




