மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

நடிகர் மாதவன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ராக்கெட்ரி படம் வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்றது. தற்போது ஹிந்தியில் ஒரு படத்தில் நடித்துள்ளார். இதன் புரொமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவரிடம் தியேட்டர்கள் மூடல், ஹிந்தி படங்கள் தொடர் தோல்வி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த மாதவன், ‛‛தியேட்டர்கள் மூடப்படுவதற்கு படங்கள் நன்றாக இல்லை என்பதாலோ, மக்கள் வருகை குறைவு என்பதால் அல்ல. இங்கு பெரும்பாலான தியேட்டர்களில் சரியான உள்கட்டமைப்பு வசதி இல்லை. இன்னும் பழைய நிலைமையிலேயே உள்ளன. மக்களின் ரசனை வாழ்க்கை தரம் உயர்ந்துள்ளது. சரியான உள்கட்டமைப்பு வசதியில்லாத காரணத்தால் மக்கள் தியேட்டர்களுக்கு செல்வது குறைந்துள்ளது'' என்றார்.
மேலும் ஹிந்தி படங்கள் தோல்வி குறித்து பேசியவர், ‛‛கொரோனா காலக்கட்டத்தில் மக்கள் பல தரப்பட்ட படங்களை பார்க்க தொடங்கினர். இதனால் அவர்களின் ரசனையும் மாறி உள்ளது. லால் சிங் சத்தா போன்ற நம்பிக்கைக்குரிய படங்களை விட புஷ்பா, கேஜிஎம் மாதிரியான தென்னிந்திய படங்கள் அதிக வரவேற்பை பெறுகின்றன. இதை வைத்து மட்டும் எந்த முடிவும் சொல்ல முடியாது. படம் நன்றாக இருந்தால் ரசிகர்கள் நிச்சயம் அதற்கான அங்கீகாரத்தை வழங்குவார்கள்''.
இவ்வாறு மாதவன் கூறினார்.