மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

கமல் நடிப்பில் கடந்த 1987ல் வெளியான விக்ரம் படத்தின் டைட்டிலையும் அதில் அவர் ஏற்று நடித்திருந்த சீக்ரெட் ஏஜென்ட் கதாபாத்திரத்தையும் வைத்து சாதுரியமாக திரைக்கதை அமைத்து அதே டைட்டிலில் கிட்டத்தட்ட இரண்டாம் பாகமாகவே இயக்கி வெளியிட்டு வெற்றியும் பெற்று காட்டியுள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.
இந்தநிலையில் இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் 2008ம் ஆண்டு கமல் நடிப்பில் வெளியான வேட்டையாடு விளையாடு திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வருமா என ரசிகர்கள் கேள்வி எழுப்ப ஆரம்பித்துள்ளனர். இதற்கு முன்பே அதாவது 2020ல் இந்த படத்திற்கு இரண்டாம் பாகம் உண்டு என்கிற தகவலை கூறியிருந்தார் கவுதம் மேனன்.
தற்போது விக்ரம் பட வெற்றியை தொடர்ந்து வேட்டையாடு விளையாடு படத்தின் இரண்டாம் பாகம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் மீண்டும் தலைதூக்கியுள்ளது. இந்த நிலையில் இந்த படத்திற்கு இரண்டாம் பாகம் இருப்பதாகவும் அதற்காக 120 பக்கங்கள் கொண்ட ஸ்க்ரிப்ட் தயாராகி விட்டதாகவும் இன்னும் கொஞ்சம் வேலை மட்டுமே பாக்கி இருப்பதாகவும் கவுதம் மேனன் ஒரு பேட்டியில் கூறியுள்ள வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. மேலும் இந்த படத்தின் கதையை எப்படியும் கமலிடம் கொண்டு சேர்ப்பேன் என்றும் இந்த படத்தின் இரண்டாம் பாகம் நடக்குமா நடக்காதா என்பது அவர் கையில்தான் இருக்கிறது என்றும் கூறியுள்ளார் கவுதம் மேனன்.