மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
தமிழ்த் திரையுலகத்தில் பலருக்கும் சூப்பர் ஸ்டார் ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதற்காக சில நடிகர்கள் சில வருடங்களுக்கு முன்பு சில பல வேலைகளைச் செய்தார்கள். ஆனால், ரசிகர்கள் தமிழ் சினிமாவில் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் தான், அது ரஜினிகாந்த் தான் என அதிரடியாகக் கூறிவிட்டார்கள்.
தமிழைப் போலவே தெலுங்கிலும் சூப்பர் ஸ்டார் ஆக வேண்டும் என பலருக்கும் ஆசை இருக்கிறது. 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் மூலம் தெலுங்கு ரசிகர்களிடம் பெரும் ஆதரவைப் பெற்றவர் விஜய் தேவரகொன்டா. அவர் நடித்துள்ள 'லைகர்' படம் பான் இந்திய படமாக அடுத்த வாரம் வெளியாக உள்ளது.
இப்படத்தின் பிரமோஷன் நிகழ்வு ஆந்திர மாநிலம் வாரங்கல்லில் நடைபெற்றது. விஜய் தேவரகொன்டா பேசிக் கொண்டிருக்கும் போதே ரசிகர்கள் 'சூப்பர் ஸ்டார், சூப்பர் ஸ்டார்' என கத்திக் கொண்டே இருந்தனர். அதைக் கேட்ட விஜய் தேவரகொன்டா, “நான் இங்கு எதையும் செய்யவில்லை. சூப்பர் ஸ்டார் என்று என்னை அழைக்க இன்னும் பல வருடங்கள் ஆகும், நான் இன்னும் சிறந்த வேலைகளைச் செய்ய வேண்டும். நீங்கள் என்னை சூப்பர் ஸ்டார் என அழைப்பது எனக்கு சங்கடமாக இருக்கிறது,” என்று வெளிப்படையாகப் பேசினார்.
இப்படியும் சில நடிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.