இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

தெலுங்கு திரையுலகில் அர்ஜுன் ரெட்டி படத்தில் கிடைத்த திடீர் புகழால் மளமளவென முன்னணி நடிகராக உயர்ந்தவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. ஆனால் கீதா கோவிந்தம் படத்திற்கு பிறகு அவருக்கு இன்னும் சொல்லிக் கொள்ளும்படியான மிகப்பெரிய வெற்றி எதுவும் கிடைக்கவில்லை. கடந்த வருடம் பூரி ஜெகன்நாத் டைரக்ஷனில் இவர் நடித்த லைகர் திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது. அடுத்ததாக தற்போது சமந்தாவுடன் இணைந்து குஷி என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து இயக்குனர் பரசுராம் மற்றும் கவுதம் தின்னனூரி ஆகியோரின் டைரக்சனில் அடுத்தடுத்து நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
லைகர் படத்தை நம்பி அதற்காக கிட்டத்தட்ட இரண்டு வருடங்களை ஒதுக்கிய விஜய் தேவரகொண்டா வேறு படங்களில் நடிக்காமல் இருந்தார். அதன்பிறகு அவர் தற்போது நடித்து வரும் குஷி திரைப்படத்தில் கூட சமந்தாவுக்கு திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவால் படப்பிடிப்பு சில மாதங்கள் தாமதமாகி தற்போது மீண்டும் துவங்கி நடைபெற்று வருகிறது. இதனால் தன்னுடைய திரையுலக பயணத்தில் மிகப்பெரிய இடைவெளி விழுவதை உணர்ந்து உஷாராகியுள்ளார் விஜய் தேவரகொண்டா.
அதன் எதிரொலியாகத் தான் அடுத்தடுத்து படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார் விஜய் தேவரகொண்டா. இந்த வருடம் அவரது நடிப்பில் உருவாகி வரும் குஷி திரைப்படம் செப்டம்பர் மாதம் வெளியாகிறது. அதே சமயம் அடுத்த வருடம் தனது இரண்டு படங்கள் எப்படியும் வெளியாக வேண்டும் என திட்டமிட்டுள்ளாராம் விஜய் தேவரகொண்டா.