சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்தவர் மீனா. அவருக்கும் வித்யாசாகர் என்பவருக்கும் 2009ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார். வித்யாசாகர் கடந்த ஜுன் மாதம் உடல்நலக் குறைவால் மறைந்தார்.
கணவரை குறுகிய காலத்தில் இழந்த மீனாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆறுதல் கூறினர். கணவர் இறந்த பிறகு சமூக வலைத்தளம் பக்கம் அதிகம் வராமல் இருந்தார். கடந்தவாரம் 90களில் முன்னணி கதாநாயகிகளான ரம்பா, சங்கவி மற்றும் சங்கீதா ஆகியோருடன் இருக்கும் புகைப்படங்களைப் பதிவிட்டு இருந்தார் மீனா.
இந்நிலையில் இப்போது மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார். நடிகை ரம்பா, நடன இயக்குனர் கலா ஆகியோருடன் கடற்கரைக்கு சென்றுள்ளார். அங்கு எடுத்த போட்டோக்களை பகிர்ந்து ‛அழகிய உள்ளங்களுடன் இனிய காலை பொழுது'' என பதிவிட்டுள்ளார். கணவர் இறந்த பின் முதன்முறையாக வெளி உலகிற்கு வந்துள்ளார் மீனா. இருப்பினும் அவரது முகத்தில் இன்னும் கணவரை இழந்த சோகம் மறையவில்லை என்பதை போட்டோவை பார்க்கும்போதே தெரிகிறது. கணவர் இழப்பிலிருந்து மீனா மெல்ல மெல்ல மீண்டும் வருகிறார்.