ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
பீஸ்ட் படத்தை அடுத்து வம்சி பைடிபள்ளி இயக்கும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார் விஜய். தமிழ், தெலுங்கில் தயாராகும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஸ்ரீகாந்த், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்த படத்துக்கு தமன் இசையமைக்கிறார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. மேலும் இந்த வாரிசு படம் பேமிலி சென்டிமென்ட் கதையில் உருவாகி வருவதாக ஆரம்பத்திலிருந்தே செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில் தற்போது சரத்குமார் வாரிசு படம் குறித்து ஒரு அப்டேட் கொடுத்துள்ளார். அவர் கூறுகையில், இந்த படம் முழுமையான பேமிலி சப்ஜெக்ட் என்று சொல்ல முடியாது. பேமிலி சென்டிமென்ட் காட்சிகள் இருந்தாலும் ஆக்சன், காமெடி என பல அம்சங்களும் கலந்து இருக்கிறது. குறிப்பாக, இந்த படம் முழுமையான அன்பை வெளிப்படுத்தும் ஒரு கதையில் உருவாகி வருகிறது. முக்கியமாக விஜய் ரசிகர்கள் எதிர்பார்க்கும் பல அதிரடியான ஆக்சன் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது என்று ஒரு அப்டேட் கொடுத்திருக்கிறார் சரத்குமார்.