ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
சின்னத்திரையின் வளர்ந்து வரும் நடிகையான ஸ்ரீநிதி சர்ச்சையான கருத்துகளை பேசியிருந்தார். இதனால் ஏற்பட்ட சிக்கலால் அவர் சீரியல்களிலும் நடிப்பதாக தெரியவில்லை. தற்போது கவுன்சிலிங்கிற்கு பிறகு சமூகவலைதளத்தில் மீண்டும் ஆக்டிவாகியுள்ள அவர் பாசிட்டிவான பதிவுகளை வெளியிட்டு வருகிறார். ஸ்ரீநிதியின் தந்தை சில வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார். ஸ்ரீநிதியையும் அவர் அக்காவையும் அவரது தாயார் தான் தனியாக வளர்த்துள்ளார்.
இந்நிலையில், தற்போது தனது குழந்தைப்பருவத்தின் போது அப்பாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ள ஸ்ரீநிதி, 'அப்பா இனி உங்களை மிஸ் செய்யவே மாட்டேன். நீங்கள் என்னுடனேயே இருப்பதை உணர்கிறேன். லவ் யூ அப்பா' என பதிவிட்டுள்ளார்.
ஸ்ரீநிதியின் இந்த பழைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அவரது தற்போதைய நிலையை கண்டு வருத்தப்படும் ரசிகர்கள் சிலர் ஸ்ரீநிதிக்கு ஆதரவான வார்த்தைகளை கமெண்ட் பாக்சில் உதிர்த்து வருகின்றனர். மேலும், ஸ்ரீநிதி விரைவில் சீரியலில் கம்பேக் கொடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.