மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் | 'அமரன்' வெற்றியைத் தக்க வைத்துக் கொள்வாரா 'மதராஸி' ? | ரிலீஸ் தேதி குழப்பத்தில் 'கருப்பு' : காத்திருக்கும் ரசிகர்கள் | பிளாஷ்பேக் : சூப்பர் ஸ்டாருக்கு பெயர் சூட்டிய சூப்பர் ஸ்டார் |
‛தர்பார்' படம் தந்த அதிர்ச்சியால் ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. விஜய்யை இயக்க முயற்சித்து வந்தார். ஆனால் அவர் மறுக்கவே அடுத்து ஒரு சூப்பர் ஹீரோ படத்தை இயக்குவதாக தகவல் வந்தது. இப்போது லேட்டஸ்ட்டாக அவர் பாலிவுட் செல்ல உள்ளாராம். ஏற்கனவே ஹிந்தி கஜினி மூலம் அங்கு பிரபலமான இயக்குனராக உள்ளார் முருகதாஸ்.
இந்நிலையில் இவர் அடுத்து இயக்க உள்ள புதிய படத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான சல்மான் கான், ஷாரூக்கான் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 1995ல் ‛கரண் அர்ஜுன்' என்ற படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர். அதன்பின் இருவரும் சில படங்களில் சிறப்பு தோற்றத்தில் இணைந்து நடித்தனர். இப்போது முருகதாஸ் படம் மூலம் மீண்டும் இருவரும் முழுநீள படத்தில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்திற்கான முயற்சியில் அமீர்கான் முழுமூச்சில் ஈடுபட்டதாகவும் அதற்கு சல்மான், ஷாரூக் ஒப்புதல் வழங்கி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.