அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில், சாய் அபயங்கர் இசையமைப்பில், சூர்யா, த்ரிஷா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கருப்பு'. இப்படம் எப்போது வெளியாகும் என்பதில் சூர்யா ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் இருக்கிறார்கள். தியேட்டர் வெளியீட்டில் ஒரு சூப்பர் ஹிட் படத்தை சூர்யா கொடுத்து பத்து வருடங்களாகிவிட்டதே அதற்குக் காரணம். “அஞ்சான், மாசு என்கிற மாசிலாமணி, 24, சி 3, தானா சேர்ந்த கூட்டம், என்ஜிகே, காப்பான், எதற்கும் துணிந்தவன், கங்குவா, ரெட்ரோ' என கடந்த பத்து வருடங்களில் அவர் நடித்து வந்த படங்கள் சூப்பர் ஹிட் என்ற அளவில் இல்லை. இவற்றில் ஒரு சில படங்கள் மட்டுமே சுமார் வெற்றியைப் பெற்றன.
இடையில் வெளிவந்த ஓடிடி ரிலீஸ் படங்களான 'சூரரைப் போற்று, ஜெய் பீம்' ஆகிய படங்கள்தான் சூர்யாவுக்கு பேர் சொல்லும் படங்களாக அமைந்தன. 'சூரரைப் போற்று' படம் 5 தேசிய விருதுகளை வென்றது. சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றுத் தந்தது.
சூர்யா தற்போது நடித்து வரும் 'கருப்பு' படம் எப்படியும் தீபாவளிக்கு வெளிவந்துவிடும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், படத்தின் வேலைகள் முடிவடைவதில் கொஞ்சம் தாமதம் ஏற்பட்டு வருகிறதாம். இயக்குனர் பாலாஜியும் இன்னும் சில காட்சிகளை எடுத்தால் நன்றாக இருக்கும் என்று கேட்கிறாராம். ஆனால், தயாரிப்பு நிறுவனம் அதற்கு சம்மதிக்கவில்லை என்கிறார்கள்.
எடுக்கப்பட்ட காட்சிகளைப் போட்டுப் பார்த்ததில் மிகவும் திருப்தியாம். படம் வேற லெவலில் வந்திருப்பதாகப் பேசிக் கொள்கிறார்கள். பல படங்களாக மாபெரும் வெற்றிக்குக் காத்திருந்த சூர்யாவுக்கு இந்தப் படம் அப்படி ஒரு வெற்றியைத் தரும் என்கிறார்கள். தீபாவளி வெளியீடு இல்லை என்றால் அடுத்து எப்போது என்ற கேள்வியும் எழுகிறது. பொங்கலுக்கு 'ஜனநாயகன்' வருவதால் அதனுடன் போட்டியிட வாய்ப்பில்லை. எல்லாம் கூடிப் பேசி ஒரு சரியான இடைவெளியில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாகத் தகவல்.