என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் | சுவர் ஏறி குதித்து குழந்தையை காப்பாற்றிய திஷா பதானியின் தங்கை : குவியும் பாராட்டுக்கள் | 18வது திருமண நாளில் 'பேமிலி' புகைப்படத்தைப் பகிர்ந்த ஐஸ்வர்யா ராய் | மகேஷ்பாபுவுக்கு நேரில் ஆஜராக அமலாக்கத் துறை நோட்டீஸ் | கதை நாயகனாக நடிக்கும் 'காக்கா முட்டை' விக்னேஷ் | 'நிழற்குடையில்' கதை நாயகியாக நடிக்கும் தேவயானி | கால் பாதத்தை டீ ஸ்டாண்ட் ஆக மாற்றிய மம்முட்டி ; வைரலாகும் புகைப்படம் | த்ரிஷ்யம்-3க்கு முன்பாக புதிய படத்தை ஆரம்பித்த ஜீத்து ஜோசப் |
மலையாள நடிகர்களில் தனது வித்தியாசமான கதை தேர்வால் மலையாள திரையுலகை மட்டுமல்ல தென்னிந்திய திரையுலகிலும் சேர்த்து ஒருவித ஆச்சரியத்தையும் பிரமிப்பையும் ஏற்படுத்திய உள்ளவர் நடிகர் பஹத் பாசில். அதன் விளைவுதான் தற்போது தமிழிலும், தெலுங்கிலும் அவர் நடித்த புஷ்பா மற்றும் விக்ரம் படங்கள் ஹிட்டானதுடன் தென்னிந்திய சினிமாவில் மோஸ்ட் வான்டட் நடிகராகவும் மாறியுள்ளார் பஹத் பாசில்.
இந்த நிலையில் மலையாளத்தில் அவர் நடித்துள்ள மலையான் குஞ்சு என்கிற திரைப்படம் ஜூலை-22ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. சஜிமோன் பிரபாகரன் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். முப்பது வருடங்களுக்கு பிறகு மலையாளத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் படம் இது. இந்தப்படத்தில் ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
சமீபத்தில் இந்தப்படத்தில் இடம் பெற்றுள்ள சோளப்பெண்ணே என்கிற லிரிக் வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தின் ட்ரெய்லரை பார்த்துவிட்டு நடிகர் சூர்யா கூறும்போது, “பஹத் பாசில், நீங்கள் எப்போதுமே உங்களுடைய கதைகளால் என்னை ஆச்சரியப்படுத்துகிறீர்கள்.. மலையான் குஞ்சு படத்தின் ட்ரெய்லரை பார்த்து வியந்தேன்.. உண்மையிலேயே வித்தியாசமான ஒரு முயற்சி” என்று பாராட்டி உள்ளதோடு இந்த படத்தை தயாரித்த இயக்குனர் பாசிலுக்கு தன் அன்பையும் மரியாதையையும் வெளிப்படுத்தியுள்ளார் சூர்யா.