மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் நினைவாக, 'பீ ஹேப்பி' என்ற பெயரில் வன பூங்கா கோவையில் அமைகிறது.மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் நினைவாக, கோவை பச்சாபாளையத்தில், 'சிறுதுளி' அமைப்பு சார்பில், எஸ்.பி.பி., வனம் உருவாக்கப்பட்டது. இந்த வனத்தை ஏற்கனவே, நடிகர் விவேக் துவக்கி வைத்தார்.
இந்நிலையில், விவேக் மரணம் அடைந்ததை தொடர்ந்து, அவரது நினைவாக 'பீ ஹேப்பி' என்ற பெயரில், ஒரு ஏக்கரில் மேலும் ஒரு வனப்பூங்காவை அமைக்க, 'சிறுதுளி' அமைப்பு திட்டமிட்டுள்ளது. 'சிறுதுளி' அமைப்பின் 19ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, நடிகர் விவேக் நினைவாக அமைக்கப்பட உள்ள இந்த வனத்துக்கு, பச்சாபாளையத்தில் நேற்று முன்தினம் பூமி பூஜை நடந்தது.'சிறுதுளி' அமைப்பின் நிர்வாகிகள் கூறியதாவது: நடிகர் விவேக் இயற்கையை பெரிதும் நேசித்தவர். ஏராளமான மரங்களை வளர்த்து, மக்களிடம் சுற்றுச்சூழல் ஆர்வத்தை விதைத்தவர்.
சிறுதுளி அமைப்புடன் இணைந்து, பல்வேறு பணிகளை அவர் செய்துள்ளார். அவரின் நினைவாக ஒரு ஏக்கரில், 'பி ஹேப்பி' வனம் என்ற பூங்கா அமைக்கப்படுகிறது. வெகுவிரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும். இவ்வாறு, அவர்கள் கூறினர். நடிகர் விவேக் பேசிய சினிமா வசனங்களில், 'பீ ஹேப்பி' என்ற வார்த்தையும் மிகவும் பிரபலம். இதை வைத்து 'மீம்ஸ்'களும் அவ்வப்போது வெளிவரும். அந்த வார்த்தையை மையப்படுத்தியே வனம் அமைய உள்ளது.