மீண்டும் சிவகார்த்திகேயனிடம் கதை சொன்ன ஏ.ஆர்.முருகதாஸ் | பைசன் படத்தின் 2வது பாடல் வெளியானது | ‛யாத்திசை' இயக்குனருடன் இணையும் ரவி மோகன் | பிளாஷ்பேக்: பாலுமகேந்திரா ஓவியமாய் தீட்டிய முதல் திரைக்காவியம் “கோகிலா” | அக். 10ல் ஒளிபரப்பாகும் ‛வேடுவன்' வெப் தொடர் | மதராஸி ஓடிடி வெளியீடு எப்போது | சிம்புதேவன் இயக்கத்தில் விமல்? | 21 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ-ரிலீஸ் ஆகும் அட்டகாசம் | ‛சூர்யா 46' படத்தின் ஓடிடி உரிமம் இத்தனை கோடியா? | வேறொருவரை வைத்து தெலுங்கு டப்பிங்: 'கிஸ்' இயக்குனர் மீது விடிவி கணேஷ் அதிருப்தி |
தமிழில் ‛இமைக்கா நொடிகள்' படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ராஷி கண்ணா. தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கில் தீவிர கவனம் செலுத்தி நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் ‛உஸ்தாத் பகத்சிங்' படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் ராஷி கண்ணா. இயக்குனர் ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பை தற்போது ராஷி கண்ணா நிறைவு செய்துள்ளார்.
இது குறித்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை பகிர்ந்து கொண்டுள்ள ராஷி கண்ணா கூறும்போது, “பவன் கல்யாணுடன் இணைந்து நடிக்கும் உஸ்தாத் பகத்சிங் படப்பிடிப்பை நிறைவு செய்து விட்டேன். அவருடன் இணைந்து பணியாற்றியது அற்புதமான அனுபவமாக இருந்ததுடன் வாழ்நாள் முழுமைக்கும் மனதில் தேக்கி வைத்து நினைத்துப் பார்க்கும் ஒரு ஞாபகார்த்தமாகவும் மிகப்பெரிய ஒரு கவுரவமாகவும் அமைந்துவிட்டது” என்று கூறியுள்ளார்.