அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' |
ஆர்ஜே பாலாஜி தனது நண்பர் சரவணனுடன் இணைந்து இயக்கி நடித்துள்ள படம் வீட்ல விஷேசம். இதனை போனி கபூர் தயாரித்துள்ளார். இது பதாய் ஹோ என்ற ஹிந்தி படத்தின் ரீமேக். 50 வயதை தாண்டிய ஒரு பெண் கர்ப்பமானால் அதனை அந்த குடும்பம் எப்படி எடுத்துக் கொள்ளும் என்பதை மையமாக கொண்ட காமெடி படம்.
இந்த படத்தின் நாயகியாக ஊர்வசி நடித்துள்ளார். நாயகனாக சத்யராஜ நடித்துள்ளார். இவர்களுடன் ஆர்ஜே பாலாஜி, அபர்ணா பாலமுரளி, பவித்ரா, கேபிஏசி லலிதா உள்படபலர் நடித்திருக்கிறார்கள். வருகிற 17ம் தேதி வெளிவருகிறது.
இதன் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இதில் கலந்து கொண்டு ஊர்வசி பேசியதாவது: என்னுடைய மதிப்பை எனக்கு அதிகமாக ஞாபகப்படுத்தும் நபர் பாலாஜி. இந்த படம் பல நாட்களாக தமிழ் சினிமாவில் வராமல் இருந்த குடும்பங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.
ஒரு நடிகரை புரிந்து கொண்டு, அவர்கள் மேல் முழு நம்பிக்கையையும் வைப்பவர் ஆர்ஜே பாலாஜி. பழைய சத்யராஜ்யை ஆர் ஜே பாலாஜி இந்தப் படத்தில் கொண்டு வந்துள்ளார். இந்த படத்தில் பழைய நடிகர்கள் பலரை நடிக்க வைத்துள்ளார். இந்த படத்திற்கு பிறகு ரஜினி சாரை இயக்கும் அளவிற்கு திறமை உள்ளவரா பாலாஜி மாறிவிட்டார். இயக்கவும் செய்வார். பட்ஜெட்டையும், வசூலையும் மனதில் வைத்து படத்தை இந்த இயக்குனர்கள் உருவாக்குகினார்கள். படத்திற்கு என் வாழ்த்துகள்.
இவ்வாறு ஊர்வசி பேசினார்.