ரஜினி, கமல் இணைவார்களா? : காலம் கனியுமா? | காளிதாஸ் 2 வில் போலீசாக நடித்த பவானிஸ்ரீ | 2040ல் நடக்கும் ‛ரெட் பிளவர்' கதை | கவின் ஜோடியாக பிரியங்கா மோகன், கொஞ்சம் ஆச்சரியம்தான்… | குட் பேட் அக்லி : 'ஓஎஸ்டி' விரைவில் ரிலீஸ் | 15 நாளில் எடுக்கப்பட்ட வெப்சீரிஸ் | 30 ஆண்டுகளுக்குப் பிறகு ‛ஜெயிலர் 2' படப்பிடிப்பில் மீண்டும் ரஜினியை சந்தித்த நடிகர் தேவன் | 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ‛புலி முருகன்' இயக்குனருடன் கைகோர்த்த பிரித்விராஜ் | ஓடிடியில் அதிகம் பார்க்கப்படும் 'தக் லைப்'!! | கவினுக்கு ஜோடியான பிரியங்கா மோகன் |
தெலுங்கு நிறுவனத் தயாரிப்பில், தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 20வது படத்திற்கு 'பிரின்ஸ்' எனப் பெயர் வைத்திருக்கிறார்கள். இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. உலக வரைபடத்தின் பின்னணியுடன் கையில் உலக மேப்பை வைத்துக் கொண்டு அமர்ந்திருக்கும் சிவகார்த்திகேயன், கீழே தேசியக் கொடிகள் ஓவியங்களாய் பூசப்பட்ட கைகள் என முதல் பார்வை போஸ்டரில் இடம் பெற்றுள்ளது.
இந்த போஸ்டரில் பின்னணியில் உள்ள உலக வரைபடம், கீழே உள்ள கைகள் இரண்டுமே காப்பியடிக்கப்பட்டவை. இப்படி ஒரு காப்பி போஸ்டர்கள் தமிழ் சினிமாவில் வருவது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் பல காப்பி போஸ்டர்கள் வெளிவந்துள்ளன.
இந்த போஸ்டரை வடிவமைத்த டிசைனர், அதற்கு அங்கீகாரம் அளித்த இயக்குனர் ஆகியோர்தான் இதற்கு பொறப்பு. போஸ்டரை மட்டும் காப்பியடித்துள்ளார்களா அல்லது படத்தில் உள்ள வேறு எதெல்லாம் காப்பி என்பது படம் வந்த பிறகுதான் தெரியும்.