அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு பிறகு வெளியாகியுள்ள படம் விக்ரம். வழக்கமான கமல் பாணியிலான படமாக அல்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் விதமாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படமாகவே உருவாகி இருக்கிறது என்று சொல்லலாம். அதனால் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் இந்த படம் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை பார்த்த திரையுலக பிரபலங்கள் பலரும் கமலுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் பிரபல ஒளிப்பதிவாளரான ரத்னவேலு இந்த படத்தை பார்த்துவிட்டு, "கமல் சார் புதிய அவதாரத்தில் அனைத்து சிலிண்டர்களையும் எரிக்க விட்டுள்ளார். லோகேஷ் கனகராஜிடமிருந்து பிரமிக்க வைக்கும் புதுவித ஆக்ஷன் திரில்லர் விக்ரம்" என கமல் உட்பட படக்குழுவினர் அனைவருக்கும் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
ரத்னவேலுவின் பாராட்டுக்களுக்கு பதில் அளிக்கும் விதமாக கமலும் உற்சாகமாக, "நீங்களும் உங்களது சிலிண்டர்களை நிரப்பி தயாராக இருங்கள். நாம் ஏற்கனவே திட்டமிட்டபடி மீண்டும் விரைவில் இணைந்து பணியாற்ற இருக்கிறோம்" என்று கூறியுள்ளார்.
விக்ரம் படத்திற்கு முன்பாகவே ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வந்தது. படப்பிடிப்பு தளத்தில் விபத்து, கொரோனா தாக்கம் உள்ளிட்ட ஒரு சில காரணங்களால் இந்த படத்தின் படப்பிடிப்பு இடையிலேயே நிறுத்தப்பட்டது.
தற்போது ஷங்கர் தெலுங்கில் ராம்சரண் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் மீண்டும் இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கும் என கமல் விக்ரம் பட புரமோஷன் நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார். தற்போது ஒளிப்பதிவாளர் ரத்னவேலுவுக்கு அவர் அனுப்பியுள்ள செய்தியின் மூலம் இந்தியன் 2 படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.