தெரு நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து விமர்சனத்தில் சிக்கிய ஜான்வி கபூர்! | சினிமாவில் 50... நம்ம சூப்பர் ஸ்டாரை நானும் பாராட்டுகிறேன் : கமல் | நாகார்ஜுனாவின் வில்லன் வேடத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்த ரஜினி! | கூலி படத்தை பார்த்துவிட்டு உதயநிதி, லதா ரஜினி வெளியிட்ட தகவல்! | பருத்திவீரன் சரவணன் நடிக்கும் போலீஸ் பேமிலி | ‛பாகுபலி' நாயகன் பிரபாஸுக்கு விரைவில் திருமணம்! | 'கூலி' படத்தின் வியாபாரம் : கோலிவுட் வட்டாரத் தகவல் | இன்று 92வது பிறந்தநாள் கொண்டாடுகிறார் பழம்பெரும் நடிகை வைஜெயந்தி மாலா | கூலி முதல் ஷோ எங்கே தொடங்குகிறது? இதுவரை 11 லட்சம் டிக்கெட் விற்பனை | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தை எதிர்த்து வழக்கு |
நடிகர் அர்ஜுன் கடந்த சில வருடங்களாக தனது இரண்டாவது இன்னிங்ஸில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்ல ஏற்கனவே சில படங்களை அவர் இயக்கியுள்ள நிலையில் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு அவரது மகள் ஐஸ்வர்யா நடித்த சொல்லிவிடவா என்கிற படத்தையும் இயக்கியிருந்தார். இந்த நிலையில் தற்போது மீண்டும் டைரக்ஷன் பக்கம் திரும்பியுள்ள அர்ஜுன் தெலுங்கில் வளர்ந்து வரும் இளம் நடிகரான விஷ்வக்சென் நடிக்க உள்ள புதிய படத்தை இயக்கவுள்ளார்.
இந்த தகவலை சம்பந்தப்பட்ட அந்த ஹீரோவே சமீபத்தில் ஒரு பேட்டியில் உறுதிப்படுத்தியுள்ளார். அதுமட்டுமல்ல இந்த படத்தின் மூலம் தனது மகள் ஐஸ்வர்யாவை தெலுங்கிலும் அர்ஜுன் அறிமுகப்படுத்த இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இன்னும் சில வாரங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கும் என்றும் விஷ்வக் சென் கூறியுள்ளார்.