வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் 'விருமன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். முத்தையா இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் படம் இது.
இப்படத்திற்காக யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த 'கஞ்சாப்பூவு கண்ணாலே' பாடலின் சிங்கிள் கார்த்தியின் பிறந்தநாளான மே 25ம் தேதி வெளியானது. யு டியூபில் 50 லட்சம் பார்வைகளை நெருங்கிக் கொண்டிருக்கும் இப்பாடல் ஹிட் பாடலாக அமைந்துவிட்டது. இந்தப் பாடலின் லிரிக் வீடியோவிற்கு இடையே ஒரிஜனல் காட்சிகள் சிலவற்றையும் இணைத்துள்ளார்கள். அதில் அதிதியின் நடனமும் சிறப்பாக அமைந்துள்ளது.
அதற்காக அதிதி ஷங்கரைப் பாராட்டியுள்ளார் இயக்குனரும் நடிகருமான எஸ்ஜே சூர்யா. “விருமன், கஞ்சாப்பூவு கண்ணாலே…வாட் எ சாங்…கார்த்தி பருத்தி வீரன் மாதிரியும், அதிதி ஷங்கர், அனுபவம்மிக்க நடிகை போலவும் இருக்கிறார்கள். குறிப்பாக 3.11 முதல் 3.16 வரையில் அதிதியின் அறிமுகப் படம் என்றே நம்ப முடியவில்லை,” என அதிதி அற்புதமாக நடனமாடியிருப்பதைப் பாராட்டியுள்ளார்.
சூர்யாவிற்கு நன்றி தெரிவித்து, 'தலைவரே, எனக்கு ஒண்ணும் புரியலை தலைவரே, என்னிடம் வார்த்தைகள் இல்லை சார்,” எனக் குறிப்பிட்டுள்ளார் அதிதி.