புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
விக்னேஷ் சிவன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா மற்றும் பலர் நடித்து வெளிவந்த படம் 'காத்துவாக்குல ரெண்டு காதல்'. இப்படம் விமர்சன ரீதியாக பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் போட்டிக்கு வேறு எந்தப் படங்களும் இல்லாத காரணத்தால் ரசிகர்களின் வரவேற்பை ஓரளவிற்குப் பெற்றது. முன்னணியில் உள்ள இரண்டு கதாநாயகிகளுடன் ஒரு காதல் கதை என்பதால் ரசிகர்கள் விமர்சனங்களைப் பற்றி கவலைப்படாமல் தியேட்டர்கள் பக்கம் சென்றனர்.
படம் வெளியாகி இன்றுடன் ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில் 66 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். “எங்களது பணியில் திருப்தி அடைவதற்குப் போதுமான காரணங்களைத் தந்ததற்காக, உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு நன்றி. உங்களை மனதில் வைத்து ஒரு பொழுதுபோக்குத் திரைப்படத்தை உருவாக்க விரும்பினோம். நீங்கள் வாங்கிய ஒவ்வொரு டிக்கெட்டிலும் உங்கள் அன்பைக் காட்டியுள்ளீர்கள். உங்கள் அன்பிற்கு எப்போதும் நன்றியுள்ளவள்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
விஜய் சேதுபதியின் அடுத்த படமாக 'மாமனிதன்' படம் அடுத்த மாதம் வெளிவர உள்ளது. நயன்தாரா நடித்து அடுத்த படமாக 'ஓ 2' ஓடிடியில் வெளியாக உள்ளது. விக்னேஷ் சிவன் அடுத்து அஜித் நடிக்கும் படத்தை இயக்கப் போகிறார்.