நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் தற்போது விக்ரம் படத்தில் நடித்து முடித்துள்ளார். ராஜ்கமல் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பஹத் பாசில், விஜய் சேதுபதி, காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சிறப்பு தோற்றத்தில் நடிகர் சூர்யா முக்கியமான திருப்புமுனை தரும் வேடத்தில் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார் .
வருகின்ற ஜூன் 3 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது . விக்ரம் படத்தின் தமிழக திரையரங்க வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெய்ன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் மற்றும் முதல் பாடலான 'பத்தல பத்தல' வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்நிலையில் இந்த படத்தின் அடுத்த பாடலான போர்க்கொண்ட சிங்கம் பாடலை இன்று வெளியிட்டனர். விஷ்ணு எடவன் பாடல்வரிகள் எழுத, ரவி பாடி உள்ளார். மகனுக்காக உருகும் பாச தந்தையின் பாடலாக இந்த பாடல் உருவாகி உள்ளது.