ஜூலை 25ல் ‛அவதார் 3' டிரைலர் | இசை நிகழ்ச்சி! கெனிஷா உடன் இலங்கை சென்ற ரவி மோகன் | ‛பராசக்தி' படத்தில் இணைந்த ராணா | வார் 2 படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு | மாரி செல்வராஜின் 'பைசன்' பிஸினஸ் எப்படி? | இறுதிக்கட்டத்தை எட்டிய ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷன் படம் | இலங்கை தமிழ் படத்தில் டி.ஜே.பானு | புராண அனிமேஷன் படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | வசூலை குவிக்க அடுத்து வருகிறது 'ட்ரான்: ஏரிஸ்' | அனிருத் இசை நிகழ்ச்சி திடீர் ரத்து |
கடந்த வருடம் ஜனவரியில் தெலுங்கில் நடிகர் ரவிதேஜா நடித்த கிராக் என்கிற படம் வெளியானது. கொரோனா முதல் அலை முடிந்து கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்த சமயத்தில் வெளியான இந்தப்படம் ரசிகர்களை கூட்டம் கூட்டமாக தியேட்டருக்கு வரவழைத்தது. அதற்கு முன்னதாக தொடர்ந்து தோல்விகளை தழுவிய ரவிதேஜாவுக்கு இந்தப்படம் மாபெரும் வெற்றியை கொடுத்து தலைநிமிர செய்தது. இந்தப் படத்தை இயக்குனர் கோபிசந்த் மாலினி இயக்கியிருந்தார்.
படம் வெளியாகி ஒரு வருடம் கடந்து விட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் கதையை 2015-ல் நான் எழுதிய நாவல் ஒன்றில் இருந்து திருடி படமாக எடுத்துள்ளார்கள் என்று சிவசுப்பிரமணிய மூர்த்தி என்பவர் படத்தின் தயாரிப்பாளர் மீது ஜூபிலி ஹில்ஸ் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். படம் வெளியாகி ஒரு வருடம் ஆகிவிட்டதால் இதன் மீது என்ன நடவடிக்கை என்பது குறித்து ஆலோசனை செய்து வருவதாக சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கதை திருட்டு குறித்து சினிமா துறையில் உள்ள தயாரிப்பாளர் சங்கம், எழுத்தாளர் சங்கம் ஆகியவற்றில் புகார் கொடுக்காமல், நீதிமன்றத்திலும் வழக்கு தொடராமல் இப்படி காவல் நிலையத்தில் ஒருவர் புகார் அளித்துள்ளது தெலுங்கு திரையுலகில் ஆச்சரியத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது