ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
தெலுங்கு திரையுலகில் இருந்து புஷ்பா, அடுத்து ஆர்ஆர்ஆர், இந்தப்பக்கம் கன்னடத்திலிருந்து கேஜிஎப்-2 என பெரிய படங்கள் எல்லாம் வெளியாகி வசூல் ரீதியாக வெற்றியை பெற்றன. இந்த சூழலில்தான் மிக பெரிய பட்ஜெட்டில் சிரஞ்சீவி நடிப்பில் உருவான ஆச்சார்யா திரைப்படமும் அந்த படங்களுக்கான வரவேற்பையும் வசூலையும் பெற்றுவிடலாம் என்கிற கணக்கில் சமீபத்தில் ரிலீசானது. ஆனால் படம் வெளியான முதல் நாளே ரிசல்ட் நெகட்டிவாக வர ஆரம்பித்ததால் தோல்விப்பட்டியலில் இடம்பிடித்து விட்டது ஆச்சார்யா.
கொரட்டலா சிவா இயக்கிய இந்த படத்தை சிரஞ்சீவியின் மகன் நடிகர் ராம்சரண் தான் தயாரித்து இருந்தார். இந்த நிலையில் இந்த படத்தினால் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்யுமாறு வினியோகஸ்தர்கள் தரப்பில் இருந்து சிரஞ்சீவி இடம் கோரிக்கை வைக்க முடிவு செய்துள்ளனர். இதில் ராஜகோபால் பஜாஜ் என்கிற விநியோகஸ்தர் மற்றவர்களுக்கு முன்னதாக முந்திக்கொண்டு சிரஞ்சீவிக்கு ஒரு கடிதமே எழுதிவிட்டார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில், இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை கடந்த ஒரு வருடத்திற்கு முன்பே முழு தொகையையும் கொடுத்து வாங்கியதாகவும், தற்போது கிட்டத்தட்ட 75% இந்த படத்தால் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள அவர் இந்த இழப்பை ஈடு செய்யுமாறு சிரஞ்சீவியிடம் கோரிக்கையும் வைத்துள்ளார். சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ள இந்த கடிதம் தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.