நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரன்ட் நாளை மூடப்படுகிறது! | சமந்தா வெளியிட்ட துபாய் பேஷன் ஷோ வீடியோவில் தெரிந்த ஆணின் கை! | வீர தீர சூரன்- 2 படத்திற்கு பிறகு மூன்று படங்களில் கமிட்டான விக்ரம்! | ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது புத்திசாலித்தனம்! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | 6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' | தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் | அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'கூலி' | பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் | 'குடும்பம் ஒரு கதம்பம்' புகழ் குரியகோஸ் ரங்கா காலமானார் : யார் இவர்... சின்ன ரீ-வைண்ட்! |
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிர் என்ற கேரக்டரில் நடித்து, சின்னத்திரையில் பிரபலமானவர் குமரன். இவர் குமார சம்பவம் படத்தின் மூலம் ஹீரோவாகி உள்ளார். பாலாஜி வேணு கோபால் இயக்கிய இந்த படம் செப்டம்பர் 12ல் ரிலீஸாகிறது. தான் ஹீரோவானது குறித்து பேசியுள்ள குமரன், ''சினிமாவில் ஹீரோ ஆக வேண்டும் என்பது என் கனவு. இப்போது ஆகிவிட்டேன். நான் எமோஷனலாக இருக்கிறேன். இது என்னுடையை 17 ஆண்டு கனவு. இந்த கனவை நனவாக்கி அனைவருக்கும் நன்றி.
எங்க குடும்பத்துல யாரும் சினிமா பேக்கிரவுண்ட் கிடையாது. அப்பா டீக்கடையில வேலை பார்த்தவரு. ஆனா, அவருக்கு நான் சினிமாவில் ஹீரோ ஆகணும்னு ஆசை இருந்தது. அவர் கனவையும் நனவாக்கி இருக்கிறேன். ஆரம்பத்துல எப்படி சினிமாவுக்கு போகணும்னு தெரியலை. எங்கயோ சுற்றி பாண்டியன் ஸ்டார்ஸ் சீரியலில் நடித்தேன். ஓரளவு பிரபலம் ஆனேன். இந்த படத்தோட பேரு குமார சம்பவம்.
இது, என் வாழ்க்கையில் முக்கியமான சம்பவமும் கூட. பாண்டியன் ஸ்டோர்ஸ் படப்பிடிப்புக்கு போகும்போது சினிமாவுக்கும் இப்படி போகணும்னு நினைச்சிட்டு இருந்தேன், அது நடந்து இருக்கிறது. இந்த பட இயக்குனர் பாலாஜி வேணுகோபால் யுடியூப் நடத்திக் கொண்டு இருந்தபோது, அதுல நடிச்சு இருக்கிறேன். இந்த படத்தை குடும்பத்தோட பார்க்கலாம். முகம் சுளிக்கும் காட்சிகள் இருக்காது'' என்றார்.