மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கொரோனா மூன்று அலைகளுக்குப் பிறகு தமிழ் சினிமா இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக அதன் பழைய நிலையை அடைந்துள்ளது. கடந்த வாரத்தில் தியேட்டர்களில் நான்கைந்து படங்கள் வெளியாகின. அதைத் தொடர்ந்து இந்த வாரமும் அதே அளவு படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் மே 5ம் தேதி ஜிவி பிரகாஷ்குமார் நடித்த 'ஐங்கரன்' படம் வெளியாக உள்ளது. அதற்கடுத்து மே 6ம் தேதி கேஎஸ் ரவிக்குமார் நடித்துள்ள 'கூகுள் குட்டப்பா', ஆர்கே சுரேஷ் நடித்துள்ள 'விசித்திரன்', நாமக்கல் எம்ஜிஆர் நடித்துள்ள 'உழைக்கும் கைகள்', மற்றும் 'வாய்தா, துணிகரம்' ஆகிய படங்கள் தியேட்டர்களில் வெளியாக உள்ளன. இதுதவிர செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள 'சாணி காயிதம்' மே 6ம் தேதியன்று ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
ஹாலிவுட் படமான 'டாக்டர் ஸ்ட்ரேன்ஜ்' படமும் மே 6ம் தேதி வெளியாகிறது.
இத்தனை படங்கள் வருவதால் இதற்கு முன்பு வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் படங்களுக்கான தியேட்டர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறையும். மே 13ம் தேதியும் நான்கைந்து படங்கள் வெளிவர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.