டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

பிரசாந்த் நீல் இயக்கத்தில், யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி மற்றும் பலர் நடித்த 'கேஜிஎப் 2' படம் கடந்த மாதம் ஏப்ரல் 14ம் தேதி வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றது. 1000 கோடி வசூலையும் இந்தப் படம் உலக அளவில் கடந்துள்ளது.
கடந்த வாரம் இப்படத்தின் வசூல் குறையும் என்று எதிர்பார்த்தார்கள். புதிய படங்கள் கடந்த வாரம் வெளியானதே அதற்குக் காரணம். ஹிந்தியில் 'ரன்வே 34, ஹீரோபன்ட்டி 2', தெலுங்கில் 'ஆச்சார்யா', தமிழில் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' ஆகிய படங்கள் வெளிவந்தன. இதனால், 'கேஜிஎப் 2' படத்தைப் பார்க்க வரும் ரசிகர்கள் எண்ணிக்கையும் குறையும் என ஒரு எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால், அந்தப் படங்கள் 'கேஜிஎப் 2' படத்தை எந்த விதத்திலும் பாதிக்கவில்லையாம். அப்படங்களின் வரவேற்பு சுமாராக இருந்ததால் 'கேஜிஎப் 2' படத்தைப் பார்க்கவே ரசிகர்கள் ஆர்வம் காட்டி உள்ளார்கள். இந்த வாரம் வரை இப்படம் தியேட்டர்களில் ஓடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் மட்டுமே 100 கோடியைக் கடக்கும் என்றும் கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.




