AA26 - A6, இத்தனை கோடி பட்ஜெட்டா : உலா வரும் தகவல் | பெண் சாமியார் வேடத்தில் தமன்னா : ஒடேலா 2 டிரைலர் வெளியானது | ஜனநாயகன் படத்துடன் வெளியாகும் ஜூனியர் என்டிஆரின் 31வது படம் | அல்லு அர்ஜுனின் அபார வளர்ச்சி : சமந்தா வெளியிட்ட பதிவு | அஜித் பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் | நடிகர் 'லொள்ளு சபா' ஆண்டனி காலமானார் | டிடி நெக்ஸ்ட் லெவல் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு | மகிழ்ச்சியே வாழ்க்கைக்கு சிறந்த மருந்து : ரகுல் பிரீத் சிங் | ஏப்., 18ல் ரெட்ரோ இசை வெளியீடு | சர்வதேச சினிமா தொழில்நுட்ப கண்காட்சியில் கமல் |
தமிழில் 'முகமூடி' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதன் பின் தெலுங்கில் சில சூப்பர் ஹிட் படங்களில் நடித்து அங்கு முன்னணி நடிகையாக உயர்ந்தார். அவர் கதாநாயகியாக நடித்து தெலுங்கில் அடுத்தடுத்து வெளிவந்த 'ராதேஷ்யாம், ஆச்சார்யா' ஆகிய படங்கள் படுதோல்வியை சந்தித்துள்ளன. இதனால், தெலுங்கு ரசிகர்கள் அவரை ராசியில்லாத நடிகை என 'டிரோல்' செய்ய ஆரம்பித்துள்ளனர்.
தமிழில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்து வெளிவந்த விஜய் நடித்த 'பீஸ்ட்' படம் தமிழில் மட்டும் வெற்றி பெற்றது. ஆனால், தெலுங்கிலும் அந்தப் படம் படுதோல்வியையும் தழுவியது. அதனால், அதையும் ரசிகர்கள் பூஜாவின் தோல்விக் கணக்கில் சேர்த்துவிட்டனர். இந்தத் தோல்விகளால் பூஜா தவித்தாலும் அவரது கைவசம் அடுத்து சில முக்கிய படங்கள் உள்ளன.
ஹிந்தியில் ரன்வீர் சிங்குடன் 'சர்க்கஸ்' படத்தில் நடித்து வருகிறார். அடுத்து தெலுங்கில் த்ரிவிக்ரம் சீனிவாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்க உள்ள படத்திலும் கதாநாயகியாக நடிக்கப் போகிறார். அதனால், தன்னுடைய தற்போதைய தோல்விகளை பூஜா பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்கிறார்கள்.