அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வந்த சரத்குமார் தற்போது மீண்டும் நடிப்பில் தீவிரம் காட்டி வருகிறார். தற்போது அவர் கைவசம் 10 படங்களுக்கு மேல் உள்ளன. இதில் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புதிய படத்தில் அவரது தந்தையாக நடிக்கிறார் சரத்குமார். பவர்புல்லான கதையில் தயாராகும் இந்த படத்தில் நடிக்கும் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் இருப்பதாக தெரிவித்துள்ள சரத்குமார், இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிப்பது தனக்கு மிகவும் மகிழ்ச்சி கொடுப்பதாக கூறியிருக்கிறார்.
அதோடு நான் நடித்த சூர்யவம்சம் படத்தின் 250வது நாள் விழா சென்னையில் உள்ள கமலா தியேட்டரில் நடைபெற்றது. அப்போது விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று நான் அந்த மேடையில் பேசி இருந்தேன். அது இப்போது உண்மையிலேயே நடந்திருக்கிறது. இதை நான் விஜய் இடத்திலும் தெரிவித்தபோது, நீங்கள் அப்போது பேசியது இன்னமும் என் நினைவில் உள்ளது என்று தெரிவித்தார். அந்தளவுக்கு விஜய்யின் எதிர்காலம் இப்படித்தான் இருக்கும் என்று நான் அப்போதே கணித்தேன். அது அப்படியே நடந்துள்ளது என்று தெரிவித்துள்ளார் சரத்குமார்.