நடிகர் சரத்குமார் ஒரு காலத்தில் முன்னனி கதாநாயகனாக தமிழ் சினிமாவில் வலம் வந்தார். இன்றைய காலகட்டத்தில் பல படங்களில் குணச்சித்ர வேடங்களிலும் அவ்வப்போது முதன்மை கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். சமீபத்தில் சரத்குமாரின் 150வது படமாக ' தி ஸ்மைல் மேன்' என்ற சஸ்பென்ஸ் நிறைந்த திரில்லர் படம் வெளியானது. அடுத்தப்படியாக அகில் எம் போஸ் இயக்கத்தில் 'ஏழாம் இரவில்' எனும் புதிய படத்தில் சரத்குமார் நடிக்கவுள்ளார். இதுவும் வித்தியாசமான கதைகளத்தில் திரில்லர் படமாக உருவாகிறது. பொங்கலை முன்னிட்டு இப்பட அறிவிப்பை வெளியிட்டு இதன் படப்பிடிப்பு மார்ச் மாதத்தில் துவங்கும் என்பதை டைட்டில் போஸ்டருடன் அறிவித்துள்ளனர்.